கடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
![kgf 2](http://image.nakkheeran.in/cdn/farfuture/4g-CuZ9jLekXNuSpklcTnQHZPAizPhqlDKIQb6zq6IE/1576307151/sites/default/files/inline-images/kgf-2.jpg)
கன்னட சினிமாவிலிருந்து இத்தனை எதிர்பார்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது என்பது ஷாரூக் கானின் ஜீரோ படத்தை விட வெற்றிகரமாக ஓடியதன் மூலம் தெரிந்தது. தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். கடந்த மே மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதனால் இந்த படத்தின் ஹைதராபாத்தில் கொஞ்ச நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் ஆதிரா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் தான் நடிக்கிரார் என்று முன்பே படக்குழு அறிவித்தது. அதன்பின் படம் குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகாத நிலையில், இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில்தான் கே.ஜி.எஃப் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.