ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து படத்தின் வெளியீடு தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 'காலா' படத்தின் டீசர் மற்றும் இசை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு காலா படத்தின் புதிய ட்ரைலரை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையே காலா ட்ரைலர் திடீரென்று தாமதமானது. என்ன காரணம் என்று ரசிகர்கள் யோசிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை பற்றி ரஜினி பேசிய ஆடியோ வெளியானது. ஏற்கனவே போராட்டங்களில் ரஜினியின் குரல் அழுத்தமாக இல்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் மூடியதை பற்றி எதுவும் பேசாமல் காலா ட்ரைலர் வெளியிடப்பட்டால் அதுவும் விமர்சிக்கப்படலாம் என்பதாலேயே இந்த திடீர் மாற்றம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மிகுந்த உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'காலா' பட ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.