Skip to main content

'சூர்யா, அஜித், மாதவனுக்கு பிறகு இவர் தான்..' - ஜோதிகா புகழாரம் 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
jyothika

 

பாப்டா நிறுவனம் சார்பாக ஜி.தனஞ்ஜெயன் தயாரித்து, ஹிந்தியில் வெற்றிபெற்ற 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கான 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஜோதிகா நடித்து, ராதா மோகன் இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ஜோதிகா தன் பட அனுபவங்கள் குறித்து பேசியபோது... "ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் நான் இந்த படத்தை பார்த்ததே இல்லை. இருந்தும் கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

 

 

 

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார். விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார். தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே எஸ்.எம்.எஸ்  மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான். இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் முன்மாதிரியாக கருதுகிறேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரையரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும். இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென இயக்குனராக மாறிய பிரபல தயாரிப்பாளர்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் முதல்முறையாக இயக்கவும் உள்ளார்.

 

dhana

 

 

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசும்போது.... ''நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறேன். இது ஒரு திகில் படமாகும். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

 

Next Story

டிக்கெட்டிற்கு 2 ரூபாய்... கஜா புயலுக்கு நிதி அளிக்கும் காற்றின் மொழி !

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
kaatrin mozhi

 

போப்டா சார்பில் தனஞ்செயன் தயாரித்து, ஜோதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'காற்றின் மொழி' திரைப்படம். இதற்கிடையே சமீபத்தில் தமிழக 'டெல்டா' பகுதி மக்கள்  'கஜா' புயலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு நிவாரண நிதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் 'காற்றின் மொழி' தயாரிப்பாளர் தனஞ்செயன். அதில்.... 

 

 

 

"காற்றின் மொழி' திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக 'டெல்டா' பகுதி மக்களுக்கு நீங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.