![flora saini says body shaming bollywood cinema](http://image.nakkheeran.in/cdn/farfuture/OEXM3lmHImfg8cvQjqWOyXJbHi02UMO1vMhl6YZyc2s/1651559191/sites/default/files/inline-images/423_5.jpg)
தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த புளோரா சைனி தமிழில் விஜய் காந்த நடிப்பில் வெளியான கஜேந்திரா, பிரபு நடிப்பில் வெளியான குஸ்தி, கருணாஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தி திரைப்பட உலகினர் தன்னை உடல் எடையை காட்டி புறக்கணித்தாக நடிகை புளோரா சைனி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் குண்டாக இருப்பதாக கூறி இந்தி பட உலகினர் புறக்கணித்தனர். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. அவர்கள் சற்று குண்டாக இருப்பதை விரும்புவார்கள். நான் மும்பையில் படத்திற்கான நடிகை தேர்வில் பங்கேற்றேன். அப்போது சில இயக்குநர்கள் நான் குண்டாக இருப்பதாகவும், அவர்களின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று கூறி நிராகரித்தார்கள் . அது மிகவும் வேதனையாக இருந்தது. அதன் பிறகு உடலை எடையை குறைக்க நிறைய நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.