![film composer harris jayaraj joining jayam ravi next movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/cOpJnxdUB6klvqJAUyt3Q7TAJKui3KhZNcuGJmDon4s/1641968746/sites/default/files/inline-images/harrish.jpg)
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குநர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் ராஜேஷ் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'வணக்கம் டா மாப்ள' உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் இதற்கு முன்பு 'தாம் தூம்', 'எங்கேயும் எப்போதும்', 'வனமகன்' உள்ளிட்ட படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.