ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காதல் காதல்தான் திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் கதாநாயகிகள் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களாக நடித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளம்பியுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா இப்படம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
லெஸ்பியனாக இருப்பவர்கள் அது பற்றி வெளியே சொல்வதை அசிங்கமாக நினைக்கிறார்கள். அது மாற வேண்டும் என நினைக்கிறேன். இது ஒரு க்ரைம் ட்ராமா படம். அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இருவரும் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்கள். ஏதாவது ஒரு பின்புலத்தை பிரதிபலிக்கும் வகையான படமாக இல்லாதபோது அதை பான் இந்தியா படம் என்கிறார்கள். ஒரு படத்தால் நம்மை அழ வைக்கமுடியும், ஒரு படத்தால் நம்மை சிரிக்க வைக்க முடியும், ஒரு படத்தால் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கமுடியும். கதை நன்றாக இல்லாவிட்டால் பான் இந்தியா படமாக இருந்தாலும் தோல்வியடையத்தான் செய்யும். பெண்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கைவசம் மற்றொரு வாய்ப்பும் உள்ளது என்பதுதான் இந்தப் படம் சொல்லவரும் மெசேஜ்.
நாம் ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லும்போது மாற்றுக்கருத்து கொண்டவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். எனக்கு சர்ச்சை மிகவும் பிடிக்கும். வழக்கமான மனிதர்களை பார்த்து எனக்கு சலிப்பு தட்டிவிட்டது". இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார்.