தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் வருகிற மே 30ஆம் தேதி பிரான்சில் ரிலீசாக இருக்கும் இப்படத்தை பிரபல கேன்ஸ் படவிழாவில் திரையிட நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு படக்குழுவினருடனும், பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இப்படம் வரும் ஜூன் முதல் வாரத்தில் இந்தியா முழுவதிலும் மற்றும் தமிழில் 'வாழ்க்கையை தேடி' என்ற பெயரில் டப் செய்தும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.