நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற ஹாலிவுட் படம் 'வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்ற பெயரில் தமிழில் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷனுக்காகவும், திரையிடலுக்காகவும் பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ் அங்கு கேன்ஸ் விழாவில் பங்கேற்றார். இதையடுத்து அவர் இந்தியா திரும்பியதும் 'வட சென்னை' படத்தை வெளியிடும் வேலைகளை ஆரம்பித்து அதேசமயம் மாரி 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் இணைகிறார். இதை முடித்த கையோடு 'ராஞ்சனா' புகழ் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிப்பதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்டில் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் கூடவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி நடிகர் தனுஷ் ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என மூன்று படவுலகில் அடுத்தடுத்த படங்கள் வெளிவரவுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Published on 29/05/2018 | Edited on 30/05/2018