![rgv](http://image.nakkheeran.in/cdn/farfuture/ndpOXw084SP-jvbjeau-u1JEi6I_pUZPrtmrUgqi3KY/1592026584/sites/default/files/inline-images/rgv_0.jpg)
இயக்கும் படங்களிலிருந்து, பதிவிடும் சமூக வலைத்தள பதிவுகள் வரை மார்க்கெட்டிங் யுக்திக்காக சர்ச்சையாகவே பேசுபவர், பதிவிடுபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.
தற்போது பார்ன் ஸ்டார் நடிகை மியா மல்கோவாவை வைத்து க்ளைமேக்ஸ் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். கரோனாவுக்கு முன்பே ஷூட்டிங் இறுதிக்கட்ட பணிகளை முடித்துவிட்ட ராம்கோபால் வர்மா, படத்தைத் தனது இணையத்தளத்தில் சமீபத்தில் ரிலீஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் வைத்துப் படம் ஒன்றை எடுத்து வருகிறார். அந்தப் படத்தின் ட்ரைலரையும் அண்மையில் ரிலீஸ் செய்திருந்தார். தற்போது 'நேக்ட்' என்ற தலைப்பில் படமெடுக்க திட்டமிட்டு, போஸ்டர் ரிலீஸ் செய்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
கரோனா வைரஸ் படத்திலிருந்து புதிதாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பாடல்கள் கடவுள்களைச் சபிப்பதுபோல சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பலரும் ராம் கோபால் வர்மாவை சாடி வருகின்றனர்.