![COBRA MOVIE RELEASE ON AUGUST11](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vgn7DgHUWOy8mC74_cnc0ugg58mjbA2rClFlEVcYoSg/1653049706/sites/default/files/inline-images/620_7.jpg)
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
#COBRA - WORLDWIDE THEATRICAL RELEASE ON AUGUST 11 🔥#CobraFromAugust11
➡️ https://t.co/MkxnIpn6m5
உலகமெங்கும் ஆகஸ்ட் 11 முதல் 🔥#ChiyaanVikram
An @AjayGnanamuthu Film🎬
An @arrahman Musical🪗@7screenstudio @IrfanPathan @SrinidhiShetty7 @roshanmathew22 @SonyMusicSouth— Seven Screen Studio (@7screenstudio) May 20, 2022