மணிரத்னம் இயக்கத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி கொண்டிருக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அகியோர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி ராவ் ஹிடாரி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய் ஆகியோரின் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்த மணிரத்னம் தற்போது சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை துபாயில் படமாக்கி வருகிறார். அதேநேரத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்கி வருகிறார். மேலும் விரைவில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படப்பிடிப்பு இதே வேகத்தில் முடிவடையும் பட்சத்தில் வருகிற அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.