Skip to main content

அடுத்தடுத்த மூவ்வில் நடிகர் பரத் 

Published on 26/04/2018 | Edited on 28/04/2018
bharath


நடிகர் பரத் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின் வெளிவரவிருக்கும் படம் ‘காளிதாஸ்’. நாயகியாக அன் ஷீத்தல் நடிக்கும் இதில் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் இப்படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்க, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். நாளைய இயக்குநர் சீசன் - 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரீசெந்தில் இப்படத்தை பற்றி பேசுகையில்....."சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நடிகர் பரத் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்" என்றார்.

சார்ந்த செய்திகள்