Published on 08/02/2025 | Edited on 08/02/2025

நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்துள்ள படம் ‘35 சின்ன விஷயம் இல்ல’. இப்படத்தில் பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறார். இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களையும் அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதையும் சொல்லப்பட்டுள்ளது.