Skip to main content

ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் ராம் படத்திற்கு பாராட்டு 

Published on 08/02/2025 | Edited on 08/02/2025
ram siva in parandhu po movie premiere at rotterdam 2025

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில்  கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டது. அதன் படி கடந்த 4ஆம் தேதி இப்படம் அங்கு ப்ரீமியர் செய்யப்பட்டது. அங்கு ராம், சிவா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். படம் பார்த்த பார்வையாளர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற கோடையில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்