Skip to main content

அமலா பாலின் அதிரவைக்கும் பர்ஸ்ட் லுக் 

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
amala paul

 

 

 

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அமலா பால் கிழிந்த ஆடையுடன் வன்முறைக்கு ஆளான பெண் தோற்றத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மெல்லிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ரத்ன குமார் பேசும்போது... "இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை. பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம்" என்றார்.

 

 

 

மேலும் 'ஆடை' படம் பற்றி அமலா பால் பேசும்போது.... "ஆடை" படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. 'ஆடை' சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களது ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும். இயக்குனர் ரத்னகுமரின் 'மேயாத மான்' படத்தை பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும்  கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது. அவ்வளவு உணர்ச்சிகரமான கதை " என்றார் அமலா பால். 'ஆடை' படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடை பெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை அமலாபாலை கௌரவித்த அமீரகம்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

actress amala paul has been granted golden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

ad

 

சமீபத்தில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் பார்த்திபன் இருவருக்கும் அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்," இந்த கௌரவத்தை பெற்றதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் துபாயின் ஒரு அங்கமாக தற்போது உணருகிறேன். எனக்கு பிடித்த இடங்களில் துபாய்யும் ஒன்று. கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு மற்றும்  அதிகாரிகளுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை" - அமலா பால் 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

hrhsdhdsh

 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவரும் நடிகை அமலாபால், தற்போது தெலுங்கில் ‘குடி யடமைத்தே’ எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படம் இன்று (16.07.2021) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ராம் விக்னேஷ் இயக்கியுள்ள இத்தொடரில் அமலாபாலுடன் இணைந்து ஈஸ்வர் ரச்சிராஜு, ப்ரதீப் ருத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த தொடர் குறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த அமலா பால், தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசும்போது....

 

"எனக்கு பதினேழு வயது இருக்கும்போது திரைத்துறைக்குள் வந்தேன். என் தனிப்பட்ட வாழ்வில் நான் கடந்துவந்த விஷயங்கள் அனைத்தும் என் திரை வாழ்விலும் பிரதிபலித்தன. அதேபோல சினிமா வாழ்வில் சந்தித்த விஷயங்கள் என் சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன. அவை இரண்டையும் பிரிக்கும் கலை எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவின் மரணத்தை நான் எதிர்கொண்டபோது, அது எனக்கு உண்மையில் ஒரு சுயபரிசோதனை காலகட்டமாகவே இருந்தது. அப்போது நான் ஒரு திறந்த புத்தகமாக உணர்ந்தேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். நான் செய்த விஷயங்களைத் தாண்டி என் வாழ்க்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதைப் போல உணர்ந்தேன். தற்போது என் சினிமா வாழ்க்கையிலிருந்து என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்தக் கலையை நான் கற்றுக்கொள்ள இன்னமும் முயற்சி செய்துவருகிறேன்" என கூறியுள்ளார்.