![Alphonse Puthren about rajinikanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/ReH_rBd7jfPUc0cJ1WbejnvrQSE3k9VDOuxxiNagOaM/1677750059/sites/default/files/inline-images/196_13.jpg)
நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் இப்படம் வெளியானது.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன், சினிமா சார்ந்து பல விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். முன்னதாக சினிமாவுக்கென்று ஒரு துறையை உருவாக்கி அதில் கமல்ஹாசனை அமைச்சராக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். மேலும் 8 வருடம் ஆகியும் அஜித்தை சந்திக்க முடியாமல் போனதாக தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சமீபத்தில் கோல்ட் படத்திற்கு தொடர் எதிர்விமர்சனங்கள் வருவதாகக் கூறி தனது எதிர்ப்பை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், "ரஜினிகாந்த் சார் இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்குங்கள். உங்கள் பேச்சு நான் கேட்டதிலேயே சிறப்பாக உள்ளது. நீங்கள் எனக்கு ஓஷோவை விட தனித்துவமான மற்றும் விலைமதிப்பற்றவர். எனவே, இன்ஸ்டாகிராமில் வந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது போல தொடர்ந்து பேசுங்கள். உங்கள் பேச்சுகள் எனக்கு எப்பொழுதும் மனதை நெகிழ வைக்கின்றன.
உங்கள் வார்த்தைகளுக்காக மில்லியன் கணக்கான மற்றும் பில்லியன்கள் மற்றும் ஜில்லியன்கள் காத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிறந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்க வேண்டாம் சார். உங்களுக்குத் தோன்றும் போதெல்லாம் பேசுங்கள். உங்கள் ரசிகர்கள் அனைவரும் கேட்பார்கள்., நீங்கள் ஏ பி சி டி என்று சொன்னாலும்.. அதுவும் ஸ்டைலாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.