பல வருடங்களாக தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சித்தார்த் தற்போது 7 வருடங்களுக்குப் பின் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'ஆர்.எக்ஸ்.100' இயக்குனர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.
'மஹா சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
தற்போது இந்தப் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்கிற புது அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு படமான 'வி' படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் பலரை சம்பாதித்துள்ள அதிதிராவ் ஹைதாரிதான் இந்தப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.