Published on 10/05/2021 | Edited on 10/05/2021
![Mansoor Ali Khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/g98-fVRNPeyka1wR2f6ToF1WSxgbxySnry9njZvqbfM/1620629645/sites/default/files/inline-images/152_3.jpg)
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிட்னியில் பெரிய அளவில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இன்று (10.05.2021) காலை மிகுந்த வலியால் அவதிப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.