Published on 17/02/2024 | Edited on 17/02/2024






தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இன்று பிறந்தாள் காண்கிறார். இதையொட்டி திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தற்போது நடித்து வரும் அவரது 23வது படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு பிரியாணி பரிமாறி மகிழ்ந்துள்ளார்.