Published on 03/02/2024 | Edited on 03/02/2024






நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் தமிழில் பிகில், விருமன் மற்றும் தெலுங்கில் பாகல் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளார். ரோபோ ஷங்கரின் உறவினரான கார்த்திக் மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திரஜா - கார்த்திக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தம்பதிகளின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நக்கீரன் ஆசிரியரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.