Published on 03/05/2023 | Edited on 03/05/2023
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்ட ஆளுமையாளர் மனோபாலா(69) உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.