நடிகர் விஜய் நடித்து வரும் அவரின் 68 வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சினேகா, லைலா, பிரசாந்த் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இதனையடுத்து விஜய் நடிக்கும் 68 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று (31.12.2023) மாலை 06.00 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (Greatest of All Time) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் LIGHT CAN DEVOUR THE DARKNESS BUT DARKNESS CANNOT CONSUME THE LIGHT (இருளை ஒளியால் விழுங்க முடியும். ஆனால் இருளால் ஒளியை உட்கிரகிக்க முடியாது) என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் 'G.O.A.T' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று (01.01.2024) மாலை 06.00 மணிக்கு வெளியானது. இந்த அறிவிப்பு பதிவை ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.