அணுகுண்டு சோதனை தடை ஒப்பந்தத்தை சோவியத் ரஷ்யா ஏற்றிருக்கிறது. இதன் மூலம் 1963-ம் ஆண்டு முழுவதும் மக்களின் இணக்கமான வாழ்க்கையையும், பிரபஞ்ச அமைதியையும் மேம்படுத்தும் முயற்சியில் சோவியத் யூனியன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு அமைதியான வாழ்விற்கான கொள்கையை மேற்கொள்ளும் சோசலிஸ்ட் சோவியத் ரஷ்யா, மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.
கடந்த ஆண்டு என்னால் சோவியத் ஒன்றியத்திற்கு செல்ல முடியவில்லை என்பது குறித்து கவலைப்படுகிறேன். சிலி தேசத்தின் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து, ஒரு உண்மையான ஜனநாயக அரசை எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் மூலம் உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். சிலிக்கு வரும் புத்தாண்டில்… 1964 பிறக்கும் போது மீண்டும் செல்லவிருக்கிறேன். அங்கே ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன.
தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பணியும் இல்லை. 1964-ல் பியூனஸ் ஏர்ஸில் உள்ள லோசடா வெளியீட்டகம் எனது 8 புதிய நூல்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்தச் சமயத்தில் நான் ரோமியோ - ஜூலியட் நூலை ஸ்பெயின் மொழியில் மொழியாக்கம் செய்து கொண்டிருப்பேன். அத்துடன் எனது நினைவுக் குறிப்புகளையும் எழுதிக் கொண்டிருப்பேன்.
சோவியத் யூனியனின் ஒரு பழைய நண்பன் என்ற முறையில் அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கும் வளமான வாழ்வுக்கும் இந்த புத்தாண்டு மேலும் வலு சேர்க்கும் என்று வாழ்த்த விரும்புகிறேன்.
-இழவஸ்தியா, ஜனவரி 1, 1964.
முந்தைய பகுதி:
நான் குற்றம் சாட்டுகிறேன்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 22.