Skip to main content

மாணவருடன் காதல் வயப்பட்ட மனைவி; கணவனிடம் காதலனைப் பற்றி சொன்ன உண்மை! - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :67

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
thilagavathi ips rtd thadayam 67

கோகுல் மச்சேரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

கோகுல் மச்சேரி என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். 27-06-15 ஆண்டில் பெங்களூரில் உள்ள மடிவாலா போலீஸ் ஸ்டேசனில் தகவல் ஒன்று வருகிறது. அருகில் இருக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் விபத்தின் மூலமாக ரத்த காயத்துடன் ஒரு பெண் இறந்திருக்கிறார் என்ற தகவல் வருகிறது. இறந்து போன அனுராதாவின் கணவருடைய பெயர் கோகுல் மச்சேரி. அவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு  பெங்களூருக்கு குடிபெயர்ந்த கோகுல் மச்சேரியின் மனைவிக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. அந்த குடிப்போதையில் தான் அவர் இங்கும் அங்கும் இடித்துக்கொண்டு காயம் பட்டு இறந்திருக்கிறார் என்று கோகுல் மச்சேரி அழுதுக்கொண்டே போலீஸில் இருந்து ஓய்வு பெற்ற தனது மாமனாரிடம் சொல்கிறார். அதன்படி மடிவாலா போலீசும் அங்கு வந்து விசாரிக்கிறார்கள். கோகுல் மச்சேரியை பற்றி அப்பார்ட்மெண்ட்டில் உள்ளவர்களிடம் போலீஸ் விசாரிக்கும் போது நல்லவிதமாக தான் சொல்கிறார்கள்.

அதன்பின்பு, இறந்துபோன அனுராதாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அந்த ரிப்போர்ட்டில், அனுராதா அளவுக்கு அதிகமாக குடித்து தலையில் இடித்துக்கொண்டதால் ரத்தகாயமாகி தான் இறந்திருக்கிறார் என்று வருகிறது. இதற்கிடையில், கோகுல் மச்சேரியின் மாமனார் அந்த இடத்திற்கு வருகிறார். கோகுல் மச்சேரியிடம் விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் அழைத்தாலும், அவருடைய மாமனார் தானும் ஒரு போலீசார் தான் என்றும், தனது மருமகன் மிகவும் நல்லவர். அதனால் கோகுல் மச்சேரியை விசாரிக்க தேவையில்லை என்று சொல்கிறார். அதனால், குடிப்போதையில் இருந்த அனுராதா விபத்தில் தான் இறந்திருக்கிறார் என்று மடிவாலா போலீஸ் ஸ்டேசனில் அந்த வழக்கை முடிக்கிறார்கள். 

இந்த சம்பவம் நடந்து சில வாரங்கள் கழித்து 05-09-2015 அன்று நள்ளிரவு 1 மணியளவில் கெம்பேகெளடா இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் டெர்மினல் மேனேஜராக இருக்கக்கூடிய சுப்ரித் கோட்டியாவுக்கு ஒரு போன் வருகிறது. வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுக்கொண்டிருக்கிற 3 பிளைட் வெடிக்கப்போவதாகவும், அதனை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் இந்த சம்பவத்தை செய்யவுள்ளனர் என்ற தகவல் வருகிறது. அதே போல், வேறு நாடுகளுக்குச் செல்லும் 3 பிளைட் வெடிக்கப்போவதாகவும் அடுத்த நாள் வெடிக்குண்டு வெடிக்கப்போவதாகவும் டெல்லி ஏர்ப்போர்ட்டுக்கும் தகவல் வருகிறது. இந்த கண்டதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பதற்றம் வருகிறது. உடனடியாக பிளைட்டில் ஏறிய அனைவர்களையும் கீழே இறக்கிவிட்டு பிளைட்டை ஆளில்லாத ஒரு இடத்திற்கு ஓட்டிச் சென்று சோதனை செய்கிறார்கள். ஆனால், எந்த பிளைட்டிலும் வெடிக்குண்டும் இல்லை. ஏற்கெனவே புறப்பட்ட பிளைட்டிலும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. யாரோ ஒருவர், பொய்யாக இந்த தகவலை சொல்லியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அந்த நபரை தேட ஆரம்பிக்கிறார்கள். அந்த பொய்யான தகவலால், அந்த ஏர்போர்ட்டுக்கு 7 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டது. அந்த நபரை பற்றி கண்காணிக்கையில், அவருடைய சிம் பற்றி விசாரிக்கிறார்கள். 

டெல்லியில் இருந்து செண்ட்ரல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்ஸி, ஆண்டி டெரரிஸ்ட் ஸ்குவாட், பெங்களூர் போலீஸ் உள்ளிட்ட அனைவரும் அந்த நபரை தேடுகிறார்கள்.  ஷாஜு ஜோஸ் என்பவரின் பெயரில் தான் அந்த சிம்மை வாங்கிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அந்த சிம் செயல்பட்டு கொண்டிருக்கும் இடமான மடிவாலாவுக்கு சென்று சிம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அது அப்பார்மெண்ட்டில் இருக்கக்கூடிய வீட்டை காண்பிக்கிறது. அந்த வீட்டிற்கு சென்று பார்க்கும் போது, தான் தான் ஷாஜு ஜோஸ் என்று சொல்லிக்கொண்டவரிடம் விசாரிக்கிறார்கள். ஏர்ப்போர்ட்டிற்கு தான் பேசவில்லை, அந்த போன் என்னுடையது இல்லை என்று தெரிவிக்கிறார். போலீஸ் அவரிடம் வெவ்வேறு விதமாக விசாரித்தாலும் இதே பதில் தான் வருகிறது. அதன்பின், ஷாஜு ஜோஸின் வீட்டை சோதித்து பார்த்ததில், குத்துவால் போன்ற கத்தி, ஆளே தெரியாத ஒரு முகமூடி, கையுறை, பயங்கரவாத நோட்டீஸ் ஆகியவற்றை கண்டுபிடிக்கிறார்கள். ஷாஜு ஜோஷ் தான் இந்த செயல்களை செய்திருக்கக்கூடும் என்று போலீஸ் எண்ணி அவரை கைது செய்யும் போது அந்த பொருள்களுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்கிறார். அவருடைய மனைவியிடம் விசாரித்தாலும், அந்த பொருள்களை வீட்டில் ஏற்கெனவே பார்த்துள்ளதாகக் கூறுகிறார். இதற்கிடையில், ஷாஜு ஜோஷின் முகநூல் பக்கத்தில் பயங்கரவாத கருத்துக்களை பதிவிட்டிருப்பதை கண்டு அவர் தான் உண்மையான குற்றவாளி என்று நினைத்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். 

இதனை தொடர்ந்து, கணவரை பார்க்க ஷாஜு ஜோஷின் மனைவி போலீஸ் ஸ்டேசனுக்கு வருகிறாள். இதற்கிடையில், ஏர்ப்போர்ட்டுக்கு தகவல் சொன்ன போன் இருக்கும் இடம், அந்த போலீஸ் ஸ்டேசனில் தான் காண்பிக்கிறது. போலீஸ் ஸ்டேசனுக்கு புதிதாக வந்த ஷாஜு ஜோஷின் மனைவியை காரை சோதனை செய்து பார்த்ததில் கார்பட்டில் இவர்கள் தேடிக்கொண்டிருந்த அந்த போன் இருக்கிறது. அந்த போனில் கனெக்ட் ஆகியிருக்கும் வைஃபை இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்கும் போது அதே அப்பார்ட்மெண்டில் வேறு ஒரு வீட்டை காண்பிக்கிறது. அந்த வீட்டிற்கு சென்று பார்க்கும் போது கோகுல் மச்சேரி இருக்கிறார். அவரிடம் போலீஸ் விசாரித்ததில், அவர் சொல்லும் பதில்கள் போலீஸுக்கு திருப்தியாக இல்லை. அதன்பின்பு, அனைத்து ஏஜென்ஸியும் சேர்ந்து கோகுல் மச்சேரியிடம் தொடர்ந்து 10 மணி நேரமாக விசாரிக்கிறார்கள். திருச்சூரைச் சேர்ந்த கோபகுமார் தான் தன்னுடைய அப்பா என்றும், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு பெண்ணை காதிலித்ததாகவும் கூறுகிறார். ஆனால், சாதி, மத வேறுபாட்டால் பெண் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறார்கள்.  அதன் பின்பு, டெல்லி வந்த கோகுல் மச்சேரி ஒரு பெரிய கம்பேனியில் வேலை பார்க்கிறார். பேஸ் புக் மூலமாக பேராசிரியராக வேலை பார்க்கும் அனுராதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் லிவ் இன் வாழ்க்கையில் இருக்கிறார்கள். அதன் பின்பு, பெற்றோர் சம்மதத்தால் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆரம்பித்தில் நல்ல விதமாக திருமண வாழ்க்கை சென்றாலும் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. 

அனுராதா நடவடிக்கை மீது கோகுல் மச்சேரிக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு நாள் மனைவியின் செல்போனை சோதனை செய்யும் போது அதில் லவ் மெசேஜ் அதிகமாக இருந்திருக்கிறது. மனைவியிடம் படிக்கும் ஒரு மாணவருக்கும், மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மெசேஜை அந்த மாணவர் அனுப்ப மனைவியும் பதிலளித்து வந்துள்ளார். இதைபற்றி தன் மனைவியிடம் கேட்ட போது, இனிமேல் இதுமாதிரி நடக்காது என மனைவி சத்தியம் செய்து கொடுக்கிறார். இருப்பினும் சந்தேகம் தீராத கோகுல் மச்சேரி பொய்யான ஒரு பெயரில் மெயில் ஐடியை உருவாக்கி யாரோ ஒருவர் போல் மனைவியிடம் ஆறுதலான வார்த்தைகளை பேசி அவரின் நம்பிக்கையை பெறுகிறார். மாணவனின் காதலையும் விட முடியவில்லை, கணவனையும் விட முடியவில்லை என்றபடி பொய்யான பெயரில் உருவாக்கப்பட்ட கணவரிடம், மனைவி தனது உண்மைகள் அனைத்தையும் சொல்கிறார். இன்னும் அந்த பழக்கத்தை தனது மனைவி விடவில்லை என்று கோகுல் மச்சேரி தெரிந்துக்கொள்கிறான்.