Skip to main content

இரண்டு குழந்தைகளின் தாய்க்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சி - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை : 09

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 parenting-counselor-asha-bhagyaraj-advice-09

 

குழந்தைகளை மற்றவர்களைப் போல நம்மால் வளர்க்க முடியவில்லையே என்று ஒப்பீடு செய்து அதனால் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிற பெற்றோர்களைப் பற்றியும் அதனால் பாதிக்கப்படுகிற குழந்தைகளைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

 

ஆறு வயது குழந்தைக்கும், புதிதாக பிறந்த ஒரு கை குழந்தையின் அம்மாவான ஒருவர் கவுன்சிலிங் வந்தார். என்னால் என் மூத்த குழந்தைக்கு விதவிதமாக சமைத்து தர முடியவில்லை, அதோடு புதிதாக பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்வதால் மூத்த குழந்தையை ஒழுங்காக கவனிக்க முடிவதில்லை என்பது மிகுந்த குற்ற உணர்ச்சியாக உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நீ தானே குழந்தைகளை வளர்த்துக் கொள்கிற பொறுப்பு என்று என் மீது திணிப்பதால், அதுவே எனக்கு மன உளைச்சலாகிறது என்றார்.

 

அதோடு பெரிய குழந்தையான அந்த ஆறு வயது குழந்தையும், என்னை பார்த்துக்க முடியலையின்னு தானே அம்மா நீ கோவப்படுற, நானே என்னையப் பார்த்துக்கிறேன் என்று சொல்லியிருக்கு, அதுவும் இந்த அம்மாவுக்கு கடுமையான மன உளைச்சலும் குற்ற உணர்ச்சியையும் அதிகரித்திருக்கிறது. இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்று சொன்னார்.

 

இதற்கெல்லாம் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக வேண்டாம் என்று சொல்லி என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டாக சொன்னேன். அதோடு குழந்தைகளின் நல்ல செயல்களை ஊக்குவித்து பழகுங்கள் என்று சொன்னேன். அவர்களுக்கு குழந்தையின் நல்ல செயல்களைப் பாராட்டி உண்டியலில் காசு போடுவார்களாம். அதோடு கணவரிடமும் பேசுங்கள் குழந்தை வளர்ப்பிற்கு அவருடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதை உணர்த்துங்கள்.

 

பட்டியல் போட்டு குழந்தைக்கு சமைத்து தரேன் என்று உறுதி கொடுக்காதீர்கள். ஒரு நாள் முடியவில்லை என்றால், குழந்தைக்கு சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னேன். அதோடு உங்களோட பெஸ்ட் குவாலிட்டியை எழுதுங்கள், பிறகு இந்த எதிர்மறை எண்ணங்கள் குறைத்து குழந்தை வளர்ப்பினை மகிழ்ச்சியோடு செய்யலாம் என்று சொன்னேன். இப்போது வேலையையும் குழந்தைகளையும் பேலன்ஸ் பண்ண கற்றுக் கொண்டார்கள்.