
தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள் குறித்து நம்மோடு துப்பறிவாளர் யாஸ்மின் பகிர்ந்து கொள்கிறார். வீடியோ கால்கள் மூலம் பெண்களை சிக்க வைக்கிற ஒரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணை மீட்டு எடுத்தது பற்றி கூறுகிறார்.
பல க்ரைம் வழக்குகளையும் நாங்கள் விசாரித்துள்ளோம். வயதான ஒரு அம்மா அழுதுகொண்டே என்னிடம் கேஸ் கொடுக்க வந்தார். கையில் நிறைய நகைகள் கொண்டு வந்திருந்தார். என் பெண்ணை ஒரு பையனிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றார். 32 வயதான தன்னுடைய பெண் ஐந்து வருடங்களாக வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பையனைக் காதலித்து வருகிறார் என்றும் எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை என்றும் கூறினார். தன்னுடைய மூத்த பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர் என்றும் அதனால் குடும்பத்தில் அவளை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
அதன் பிறகு இளைய மகளின் காதலனிடம் தான் பேசிப் பார்த்த பிறகு அவன் நல்ல பையன் என்பதை அறிந்துகொண்டு திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறினார். ஒருநாள் தன்னுடைய பெண்ணின் ரூமுக்கு சென்றபோது ஸ்கைப் காலில் நிர்வாணமாக அந்தப் பையனோடு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். கல்யாணம் பண்ணிக்க போகிறவன் எதற்கு வீடியோ கால் பேச வேண்டும் என சந்தேகப்பட்டு அவன் நல்லவனா இருப்பானா என்பதை தெரிந்து கொள்ள விசாரிக்க சொன்னார். அவன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தான். எங்களுடைய டீமோடு வெளிநாடு சென்றோம். விசாரிக்கத் தொடங்கினோம். அவன் வேலை முடிந்த பிறகு நான்கு வீடுகளுக்கு அவன் அடிக்கடி சென்றான்.
அந்த வீடுகளை அவன் குத்தகைக்கு எடுத்து அவற்றை வாடகைக்கு விட்டு வந்தான். ஒரு பெண்ணோடு அவன் நெருக்கமாகப் பழகினான். அங்கு வருபவர்களின் பாலியல் இச்சைக்குப் பெண்களை சட்ட விரோதமாக அனுப்பும் வேலையையும் செய்து வந்தான். ஒரு பாலியல் தொழிலாளியோடு நெருக்கம் ஏற்பட்டு திருமணமும் செய்திருந்தான். அவன் ஆபத்தானவன் என்றும் எதோ ஒரு வகையில் உங்களது பெண்ணையும் இது போல் ஆக்கி விடலாம் என்பதை அந்தப் பெண்ணின் தாயிடம் ரிப்போர்ட் கொடுத்தோம். ஆன்லைன் மூலம் காதல் செய்பவர்களும் ஒருமுறை நேரில் சென்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.