தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டு குத்திக்காட்டும் மனைவிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுகிறது. அந்த மாற்றுத்திறனாளி ஆண் தான் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வருகிறார். அவர் என்னிடம், வாழ்க்கையில் ஒவ்வொரு படிக்கட்டையும் கஷ்டப்பட்டு எடுத்து வைத்து திருமணம் என்பதே நமது வாழ்க்கையில் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த போது ஒரு பெண் என்னுடன் பேசி பழகுகிறார். ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்கிறார். திருமணம் செய்ய வேண்டும் என்னை பாதுகாக்க பல்வேறு சிரமங்களை சமாளிக்க வேண்டிருக்கும் என்று யோசனை செய்யுங்கள் என்று கூற அவரும் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியதில் எங்களுக்குள் இந்த திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும் நாட்கள் செல்ல செல்ல, உன்னை நான் திருமணம் செய்ததே பெரிய விஷயம் என மனைவி அடிக்கடி கூறி குத்திக்காட்டுகிறார். இத்தனை வருடமாக மாற்றுத்திறனாளியாக இருக்கும் போது அதை பற்றி யோசிக்காமல் இருந்தேன். ஆனால் மனைவி தன்னை குத்திக்காட்டி பேசுவது இப்போது ஒரு குற்ற உணர்ச்சி மனநிலையில் இருக்கிறேன் என்றார்.
நான் அந்த மாற்றுத்திறனாளியிடம், திருமணத்திற்கு முன்பு இருந்ததை காட்டிலும் இப்போது மனைவியை அவரை சார்ந்து அதிகம் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லவே இல்லை என்றார். முடிந்த அளவிற்கு தன்னால் தனியாக சமாளிக்க முடிகிறது. இருந்தாலும், மற்றவர்கள் மாதிரி சுலபமாக எந்த இடத்திற்கும் செல்ல முடியாது. இதனால், மனைவி சலிப்போடு ஒரு பார்வை பார்க்கிறார். அது தனக்கு வலியை தருகிறது என்றார். இவரிடம் பிரச்சனை இல்லை என்பதை தெரிந்தபின்பு அவரின் மனைவியை அவர் மூலமாக கவுன்சிலிங்கிற்கு வரவழைத்தேன்.
விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், மற்ற தம்பதியர் மாதிரி நாம் இருக்கமுடியாது என்ற எதிர்பார்ப்புகளையும் கடந்து சில பிரச்சனைகள் வரும்போது தான், தாம் செய்ததே பெரிய விஷயம் என்ற எண்ணத்தில் பேசிவிடுவதாகவும் கூறினார். அதன் பின்பு நான், திருமணத்திற்கு முன்பு, கணவரின் ஜேலஞ்ஜை பார்த்து வந்த காதலும், திருமணத்திற்கு பின்பு வந்த காதலும் மாறவே இல்லை. ஆனால், அந்த பிஷிக்கல் ஜேலஞ்ஜிற்கு தகுந்த மாறி நாம் மாறாமல் அவர் மாற்றிக்கொள்ளலாமல் என்று நினைக்கும் போது அந்த மாதிரி பேசிவிடுகிறீர்கள். இந்த மனநிலை எல்லாம், கணவருடைய இயலாமைக்கு தகுந்த மாதிரி நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. உங்களுடைய இயலாமையை மறைப்பதற்கு கணவருடைய இயலாமையை குத்திகாட்டி பேசுகிறீர்கள் என்றேன். அப்படி சொல்லும்போது அவர் கண்ணீர் விட்டார். திருமணத்திற்கு முன்பாகவே, நீங்கள் பிரோபோஸ் செய்யும் போது அவரின் குறைகள் அனைத்தையும் உங்களிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு நீங்கள் யோசித்துக்கொண்டு தான் இந்த திருமணத்தை செய்திருக்கிறீர்கள். அப்படியென்றால் வாழ்க்கையில் இனிமேல் வரும் ஜேலஞ்ஜை சந்திக்க தயாராக விட்டீர்கள் என்று தான் அர்த்தம் என்றேன்.
மனைவிக்கு சொல்வதற்கு கூட தனக்கு தகுதி இல்லை என்றும், மனைவி செய்த செயல்களால் இறந்துவிடலாம் என்று மனநிலைக்கு வந்துவிடும் என்றும் மாற்றுத்திறனாளியான அவர் என்னிடம் கூறிய அனைத்தையும் அவரது மனைவியிடம் சொன்னபோது அவர் அழுதுவிட்டார். ஒருவருடைய இயலாமையை, சொல்லாமலே செயல்கள் மூலம் காட்டுவது தான் ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய அவமானம். கணவரிடம் நல்லா பேச வேண்டும் அல்லது அவரை விட்டு பிரிய வேண்டும், ஆனால், அவரோடு இருந்துக்கொண்டு அவருடைய இயலாமையை குறைசொல்வது நியாயமில்லை என்றேன். 31 வருடமாக தனியாக நன்றாக வாழ்ந்த அவர், நீங்கள் இல்லாமல் போனாலும் கூட சரியாக வாழ்வார். ஒன்று, முன்பு இருந்ததை காட்டிலும் அவரை சிறப்பாக வாழ வைக்க வேண்டும். அல்லது அவரை விட்டு பிரிய வேண்டும் என்றேன். இதையெல்லாம் சொன்ன பிற்கு, புரிகிறது என்று சொல்லிவிட்டு கிளம்பினார். இரண்டு மாதம் கழித்து இரண்டு பேரும் என்னை பார்க்க வந்திருந்தனர். அந்த கணவர், என் கையை இறுக பற்றிக்கொண்டு வார்த்தைகளே இல்லாமல் இருந்தார். ரொம்ப நன்றி சார், என்று கண்ணீரோடு சொன்னார். இந்த அனுபவம் என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது.