Skip to main content

மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பிரிந்த தம்பதிகளின் நிலை என்ன? - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 46

Published on 26/08/2024 | Edited on 26/08/2024
jay zen manangal vs manithargal 46

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், டைவர்ஸ் வாங்கிய பிறகு சேர்ந்து வாழ ஆசைப்பட்ட இரண்டு தம்பதிகளுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

டைவர்ஸ் வாங்கிய பிறகு கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனிதனியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு காலகட்டத்திற்கு பிறகு, சுற்றி இருக்கக்கூடிய மற்ற தம்பதியினர்களை பார்க்கும்போது அவசரப்பட்டுவிட்டோமோ என்ற மனநிலையில் இரண்டு தம்பதியினர் என்னிடம் வந்தனர். இரண்டு வேறு விதமான அனுபவங்களை தான் இங்கு பகிரப்போகிறேன். 

முதல் தம்பதியை எடுத்துக்கொண்டால் மனைவி தான் முதலில் வந்தார். அவர் என்னிடம், டைவர்ஸ் வாங்கிய பிறகு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும், மற்றவர்களை பார்க்கும்போது இப்படியான சிந்தனைகளை தோன்ற ஆரம்பிக்கிறது. எனக்கு ஆதரவாக யோசிக்காமல், நான் செய்தது சரியா? மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பிக்கிறேன். கம்பேனியில் உள்ள ஒரு தம்பதியரிடம் பேசும்போது நான் இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கலாமோ? என்ற தோன்ற ஆரம்பிக்கிறது. உங்களிடம் பேசிய பிறகு என் கணவரிடம் பேச நினைக்கிறேன் என்றார். 

மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ ஆரம்பிப்பது நல்ல விஷயம் தான். உங்களிடம் பேசும்போது உங்களது தவறை உணர்ந்துவிட்டீர்கள் எனத் தோன்றுகிறது. சேர்ந்து வாழ்வது குறித்து உங்களது கணவரிடம் பேசுங்கள் என்றேன். ஆச்சரியமாக அந்த பெண்ணின் கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார். அதன் பின், இரண்டு பேரும் என்னிடம் வருகிறார்கள். இரண்டு பேரிடமும் தனித்தனியாக பேசுகிறேன். அவர்கள் இருவரும், தங்களது தவறை ரீ கன்சிடரபிள் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களிடம், நான் கொடுக்கப்போகும் செக்சன் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காக அல்ல, இந்த மனநிலைக்கு பிறகு நீங்கள் இருவரும் சேர்ந்து வாழும் போது எது சரி? எது தவறு? என்று யோசிக்கும் மனநிலைக்காக தான் இந்த செக்சன் ஆரம்பிக்கப்படுகிறது என்ற கண்டிசன் போட்டேன். இந்த செக்சன் முடிந்த பிறகு நீங்கள் சேர்ந்து வாழவோ அல்லது பிரிந்தோ செல்லலாம் என்று உங்களிடம் இரண்டு ஆப்சன் இருக்கிறது. இந்த கண்டிசனுக்கு உங்களுக்கு சம்மதம் என்றால் செக்சனை ஆரம்பிக்கிறேன் என்றேன். ஏனென்றால், முதலிலேயே முடிவு செய்துவிட்டு வருவது தான் மிகவும் ஆபத்தான மனநிலை. 

நான் போட்ட கண்டிசனுக்கு நிறையவே டைம் எடுத்துக்கொண்டு வந்து செக்சனில் கலந்துகொண்டார்கள். செக்சனில் வேறு வேறு விஷயங்களை பற்றி பேசும்போதெல்லாம் இரண்டு பேருமே நிறையவே அழுதார்கள். தவறுகளை வேகமாகவும், உணர்தலை மிகவும் மெதுவாகவும் செய்பவை தான் மனித மனம். அந்த தவறை உணர்ந்தாலும், அதை வெளிகாட்டுதல் அதை விட மிகவும் மெதுவாக தான் செய்யும். தான் செய்வது தான் சரி என்ற மனநிலையோடு தான் டைவர்ஸுக்கு செல்வார்கள். இரண்டு பேருடைய சரி தான் டைவர்ஸ் அளவுக்கு வந்துவிடும். நான் செய்வது தவறு தான் என்று உணரும் போது தான் சேருவதற்கான மனநிலையில் உருவாக்கும். அதுபோல், இந்த தம்பதி தங்களது தவறை உணர்ந்து நிறையவே அழுதார்கள். அந்த தம்பதிக்கு கொடுத்த செக்சன் அனைத்தும் முடிந்த பிறகு 1 மாதம் டைம் எடுத்து யோசிக்க சொன்னேன். அதன்படி, அவர்கள் இருவரும் வந்து எந்தவித குழப்பமும் இல்லாமல் மீண்டும் சேர்ந்த வாழ ஆசைப்படுவதாக சொன்னார்கள். இரண்டு பெற்றோர்களிடம் சொல்லி வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். 

இதே மனநிலையோடு தான் இரண்டாவது தம்பதி என்னிடம் வந்தனர். அவர்களோடு டைவர்ஸுக்கான காரணங்கள் வேறு என்பதால் வேறு மாதிரியான செக்சனை அவர்களுக்கு கொடுக்கிறேன். ஆனால், இந்த தம்பதியிடம் அந்த அழுகை இல்லை. மாறாக, அவர்களிடம் இன்னும் நியாயப்படுத்துதல் தான் அதிகமாக இருக்கிறது. எதிர்ப்பு மனநிலையோடு இருக்கும் அவர்களிடம் தங்களது தவறை உணரும் உணர்தல் இல்லை. சமூகத்திற்காக இப்படி வாழ்ந்தால் என்ன என்ற மனநிலையில் தான் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று என்னிடம் வந்துள்ளனர். செக்சன் முடிந்த பிறகு, திரும்ப வரும்போது மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றனர். முதல் தம்பதி தங்களது தவறை உணர்ந்து பெற்றோர்களிடம் கூறி சண்டை போட முடிந்தது. ஆனால், இரண்டாவது தம்பதி தங்களது தவறை உணராததால் பெற்றோர்கள் பேச்சை கேட்டுள்ளனர். இந்த இரண்டு அனுபவங்களுமே எனக்கு வித்தியாசமானது.