முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், டேட்டிங் செயலி மூலம் நடக்கும் பிளாக் மெயில் சம்பவம் பற்றி விவரிக்கிறார்
இன்றைக்கு பெரும்பாலும் டேட்டிங் ஆப் மூலம் பல மோசடிகள் நடந்து வருகிறது. டேட்டிங் ஆப்-கள் வந்த பிறகு பல மோசடி கும்பல்களும் உருவாகி இருக்கிறது. நூதன முறையில் ஏமாற்ற அந்த கும்பல் டேட்டிங் ஆப்பை பயன்படுத்துகிறார்கள். அந்த ஆப் முதலில் பயன்பாட்டார்களின் திருமணத்திற்கு உதவியது காலப்போக்கில் உடலுறவு தேவைக்காக அதிகம் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடலுறவு செய்பவர்களை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டும் மோசடியில் தொடர்ந்து குறிப்பிட்ட கும்பல் செய்து வருகின்றனர்.
இந்த மோசடி கும்பல் பக்கம் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் இருப்பார்கள். இவர்களை வைத்துதான், டேட்டிங் வரும் ஏதோ ஒரு ஆண் அல்லது பெண்ணை எங்கு வர வேண்டும் என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து மோசடி கும்பல் நினைக்கும் இடத்திற்கு வர சொல்வார்கள். அங்கு கேமரா பொருத்தி வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்யத் தொடங்குவார்கள். அதிலும் சிறுவர்களை டார்கெட் செய்யாமல் 35 மற்றும் 40 வயதிற்குட்பட்ட குடும்ப சூழலில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களைத்தான் டார்கெட் செய்வார்கள்.
இப்படித்தான் டார்கெட் செய்து பிளாக் மெயில் செய்யப்பட்ட ஒரு கல்யாணம் ஆன ஒரு தம்பி என்னிடம் வந்தார். அவர் என்னிடம் வந்து, டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணிடம் பழகியதாகவும், அந்த டேட் பண்ண வீடியோவை தனக்கு அனுப்பி பணம் கொடுக்கவில்லை என்றால் ஆன்லைனில் போட்டுவிடுவதாகவும் மிரட்டுவதாக சொன்னார். அதன் பிறகு நான், அந்த தம்பியிடம் ஒரு தொகையை கொடுத்து அந்த மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்க சொல்லி அனுப்பினோம். அப்படியே நாங்களும் அவரை பின் தொடர்ந்து போனோம்.
அங்கு அவர் பணம் கொடுக்கும்போது பணம் வாங்க ஒரு நபர் வந்தார். அதன் பிறகு அந்த நபரை, பின் தொடர்ந்து அவர் யார் என்று கண்டுபிடித்து அந்த தம்பியிடம் சொன்னோம். பின்பு சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுங்கள் என்று அந்த தம்பியிடம் சொன்னோம். ஆனால் அந்த தம்பி வீடியோ ஆன்லைனில் லீக் ஆகிவிடுமென்று பயந்துகொண்டே இருந்தார். பின்பு அவரிடம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதை கண்டுபிடித்து சைபர் கிரைம் போலீஸார் நீக்கி விடுவார்கள் என்று அந்த தம்பிக்கு அறிவுரை கூறி அனுப்பினோம். அவரும் அதன்படி, சைபர் கிரைமில் புகார் அளித்து அந்த விஷயத்தில் இருந்து அவர் வெளியே வந்துவிட்டார். இந்த கேஸ் இப்படித்தான் ஒரு முடிவுக்கு வந்தது.