முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், குளிக்கும் வீடியோவை மந்திரவாதிக்கு அனுப்பிய பெண் கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு பெண் பதற்றத்தோடு என்னிடம் வந்தார். தனக்கும், தனது கணவருக்கும் இடையே யாருமே வரக்கூடாது, தங்களுடைய அன்னோன்யம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். அவர், தன்னுடைய நிர்வாண போட்டோ, குளிக்கும் வீடியோ, பணம் ஆகியவற்றை கேட்டதால் கணவனுக்கு தெரியாமல் தானும் கொடுத்துவிட்டதாக சொன்னார். தான் அனுப்பிய அந்த வீடியோ இன்னொரு குரூப்புக்கு சென்றுவிட்டதால், அதை எப்படி டெலிட் செய்ய வேண்டும் என்றும், அந்த மந்திரவாதி அந்த வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தான் அந்த பெண் என்னிடம் வந்தார்.
அந்த பெண்ணிடம் பேசி அந்த மந்திரவாதியின் அட்ரஸ்ஸை வாங்கினோம். பணம் வேண்டுமென்றால், மந்திரவாதியை நமது இடத்துக்கு வந்து வாங்க சொல்லுங்கள் என்று அந்த பெண்ணிடம் கூறினேன். அந்த பெண் ஆரம்பத்தில் பயந்தாள். அதன் பிறகு, அந்த மந்திரவாதி இங்கு வரவே இல்லை. அந்த வீடியோவும் இண்டர்நெட்டில் அப்லோட் ஆகவில்லை. அந்த குரூப்பில் உள்ளவர்களை வரவழைத்து அவர்களிடம் பேசி அந்த வீடியோவை டெலிட் செய்ய வைத்தோம். அப்லோட் செய்தால், சைபர் கிரைம் மூலம் மாட்டிக்கொள்வீர்கள் என ஒவ்வொருவரிடம் பேசினோம். அதன் பின்னர், அந்த வீடியோ இண்டர்நெட்டில் வரவில்லை. தன் தவறை உணர்ந்துவிட்டதாக அந்த பெண்ணும் சென்றார்.
மந்திரவாதியிடம் பணத்தை கொடுப்பதை விட்டுவிட்டு, ஒழுங்காக உங்களது கடமையையும், வேலையையும் செய்தாலே நன்றாக இருப்பீர்கள்.