முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், திருமணத்திற்காக மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க பெற்றோர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
தங்களுடைய மகளுக்கு மேட்ரிமோனி மூலம் ஒரு வரன் வந்திருக்கிறது. திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று பையன் அவசரப்படுத்துகிறார். பீரி மேட்ரிமோனி வகையில் பையனை செக் செய்ய வேண்டும் என்று ஒரு பேரண்ட்ஸ் கேஸ் கொடுத்தார். பையனுடைய அம்மா அப்பாவிடம் பெண் வீட்டார் பேச வேண்டும் என்று சொன்னாலும், அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்துவிட்டு பையனுடைய செல்போனில் தான் பேச வைப்பார். சென்னையிலே இல்லாத பென்ஸ் கம்பேனியில் வேலை பார்ப்பதாகவும் பெண் வீட்டில் பையன் கூறியிருக்கிறார். இதை கேட்டதும் எனக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.
அதன் பின்னர், பையனுடைய வீட்டின் அட்ரஸ், இருக்கிறது என்று சொல்லக்கூடிய அந்த கம்பேனி இருக்கும் இடத்தின் அட்ரஸ் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு இந்த கேஸை நடத்த ஆரம்பிக்கிறோம். வீட்டின் அட்ரஸிற்கு சென்று பார்த்தால் பையன் மட்டும் தான் இருக்கிறார். பையனை ஃபாலோவ் செய்த போது, தான் வேலை பார்ப்பதாக கூறிய இடத்திற்கு போகவில்லை என்பதை கண்டுபிடிக்கிறோம். பையன் அவனுடைய பெற்றோரை பார்க்கிறாரா என்பதை பார்த்தாலும் அது நடக்கவில்லை. எங்களுடைய அறிவுரையின்படி, பையனுடைய பேரண்ட்ஸிடம் பேச வேண்டும் என்று பெண் வீட்டார் பையனிடம் கூறுகிறார்கள். அடுத்த நாள் அவனுடைய பேரண்ட்ஸ் அழைப்பதாக அவன் கூறியதால் நாங்கள் மூன்று பேரை போட்டு பையனை ஃபாலோவ் செய்து கண்காணித்தோம். அப்படி பார்க்கும்போது மதிய நேரத்தில், பையன் ஒரு காஃபி ஷாப்பிற்கு நுழைகிறான். அதன் பிறகு வயதான இரண்டு பேர் வருகிறார்கள். பையன் போனை போட்டு கொடுக்கிறார். தம்பதியில்லாத அந்த வயதான இரண்டு பேரும் பெண்ணுடைய பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசி முடித்த பின், அந்த வயதான இரண்டு பேரும் வெவ்வேறு டாக்ஸியில் செல்கிறார்கள். அந்த வயதான இரண்டு பேரை ஃபாலோவ் செய்யும் போது அவர்கள் வெவ்வேறு இடத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் இரண்டு பேரும் வாடகைக்கு வரக்கூடிய ஆட்கள் என்பதை கண்டுபிடிக்கிறோம்.
இதற்கிடையில், நல்ல வேலையில் அதிகப்படியாக வருமானத்தை பெறும் அந்த பெண்ணிடம் பேசி, இடையில் இந்த பையன் 20 லட்ச ரூபாய் அளவுக்கு பணத்தை வாங்கிருக்கிறான் என்பதை பெண்ணிடம் இருந்து தெரியவருகிறது. இந்த தகவல் பெற்றதையடுத்து, இனிமேல் பையனை ஃபாலோவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவன் சரியான ஃப்ராடு என்பதை பெண் வீட்டாரிடம் சொன்னோம். இதுவரையில் நடந்தது போகட்டும் இனிமேல், ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறி அந்த பையனிடம் இருந்து விலகுங்கள் என்றும் பெண் வீட்டாரிடம் எடுத்துச் சொன்னோம்.