
குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
லஷ்மி நாராயணன் என்பவரின் வழக்கு இது. நல்ல சம்பாத்தியத்துடன் சென்னை நீலாங்கரையில் வசித்து வரும் இவருக்கு மேட்ரிமோனி மூலம் திருநெல்வேலியைச் சேர்த்த ஒரு பெண்ணின் பக்கத்தைப் பார்த்து திருமண வரன் பேசியுள்ளனர். அந்த பெண் சென்னையில் வேலை செய்துகொண்டு ஹாஸ்டலில் தங்கி பணியாற்றி வருகிறாள். முதலில் பெண் வீட்டில் சென்று பேசிய பிறகு இருவீட்டாருக்கும் திருமணத்தில் ஏக சம்பந்தம் இருந்துள்ளது. அப்பா இன்றி அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த அந்த பெண்ணுக்கு தன்னை பிடித்துள்ளதா என்ற சந்தேகத்துடன் லஷ்மி நாராயணன் அந்த பெண்ணுக்கு கால் செய்து பிடித்துள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பிடித்திருக்கிறது என்று கூற சந்தோஷத்துடன் திருமணத்திற்கான அடுத்தடுத்த காரியங்களில் லஷ்மி நாராயணன் கவனம் செலுத்தினான்.
கல்யாணம் ஆவதற்கு முன்பு சென்னையில் அடிக்கடி லஷ்மி நாராயணனும் அந்த பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வெளியே சென்று ஒருவருக்கொருவர் பேசி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டர். இப்படியே சந்தோஷமாக திருமணத்திற்கு முன்பு இருவரும் பழகிய நிலையில் திருமணநாள் நெருங்கியிருக்கிறது. அப்போது லஷ்மி நாராயணன் குடும்பத்தினர் திருமணச் செலவு அனைத்தையும் அவர்களே செய்ய முடிவெடுத்து திருமணத்திற்கு 10 நாளைக்கு முன்பு கல்யாண பொண்ணுக்கு தேவையான நகை, சேலை அனைத்தையும் எடுக்க தி.நகரில் ஒரு நாள் முழுவதும் சுற்றி எல்லாவற்றையும் வாங்கியிருக்கின்றனர். இதையடுத்து திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து அந்த பெண் லஷ்மி நாராயணனுக்கு கால் தான் ஏற்கனவே காதலித்த பையனைப் பற்றி கூறியிருக்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த லஷ்மி நாராயணன், இவ்வளவு நாள் பழகி பேசிவிட்டு இப்போது ஏன் அதை சொல்கிறாய் என்று அந்த பெண்ணிடம் கேட்க அதற்கு அவள், கணவனாக வருபவரிடம் உண்மைகளை மறைக்க கூடாது என்று சொல்லிருக்கிறது. பின்பு பழையதை மறந்து நீ என்னுடன் புது வாழ்க்கை தொடங்கு என்று அன்பாக பேசியிருக்கிறார்.
அதன் பின்பு இருவருக்கும் திருமணம் நடந்து முடிய தனது மனைவி தன்னுடன் திருமண மண்டபத்தில் நடந்துகொண்ட விஷயங்களைப் பார்த்து உண்மையிலேயே மனைவி தன்னுடன் பாசமாக நடந்துகொள்கிறாள் என்று அந்த நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருந்தார். அதற்குகேற்ப மனைவியும் திருமண ஆல்பத்திற்கு லஷ்மி நாராயணனுடன் நெருக்கமாக போஸ் கொடுத்துத்துள்ளது. அதன்பிறகு முதலிரவில் அவனது மனைவி மிகவும் சோர்வாக இருப்பதாக கூறி முதலிரவை தள்ளிப்போட சொல்லி லஷ்மி நாராயணனிடம் கேட்க அதற்கு அவரும் சரி என்று கூறியுள்ளார். பின்பு மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் காலையில் கோயிலுக்கு செல்லும்போது தனது மனைவி தன் தோலில் சாய்ந்து சிரித்து பேசுவதை பார்த்த லஷ்மி நாராயணன், உண்மையிலேயே முதலிரவின்போது மனைவி சோர்வாகத்தான் இருந்திருக்கிறாள் என்று தனக்க்குதானே புரிந்துகொண்டான். அடுத்த நாள் இரவு மனைவியை லஷ்மி நாராயணன் நெருங்கும்போது அப்போது கொஞ்சம் டைம் வேண்டும் அதனால் தாம்பத்திய உறவை தள்ளி வைக்கலாம் என்று கூற, லஷ்மி நாராயணன் அதற்கும் ம்ம்ம்... என்று ஒப்புக்கொள்கிறான்.
இதையடுத்து இருவருக்கும் மாலத்தீவில் ஹனிமூன் ட்ரிப் பிளான் செய்து குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்றதும் லஷ்மி நாராயணன் மனைவி தனது வேறு முகத்தை காட்டத் தொடங்கினாள். லஷ்மி நாராயணனை அருகில் நெருங்கி உட்காரகூடாது தொடக்கூடாது கை போடக்கூடாது என்று லஷ்மி நாராயன் நொந்துபோகும் அளவிற்கு அவனின் மனைவி நடந்திருக்கிறாள். இதையெல்லாம்விட ஒருபடி மேலாக தன்னை தொட்டால் தற்கொலை செய்துவிடுவதாக லஷ்மி நாராயணனை அவனின் மனைவி மிரட்டியிருக்கிறாள். பிரச்சனை என்ன என்று மனைவியிடம் லஷ்மி நாராயணன் விசாரிக்க, அம்மாவின் கட்டாயத்தினால்தான் திருமணம் செய்துகொண்டேன் என்றும் மற்றபடி திருமணத்தில் துளி அளவும் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறாள். இதை முன்பே சொல்லியிருக்கலாமே என்று லஷ்மி நாராயணன் கேட்க அதற்கு அவள், அம்மா தன்னை எமோஷனலாக திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவைத்தார். அதனால்தான் திருமணம் முடியும்வரை நன்றாக பழகுவதுபோல் நடித்தேன் என்று சொல்லிருக்கிறாள்.
நடந்ததை கால் செய்து தனது அக்காவிடம் கூறிய லஷ்மி நாராயணன், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு இருவீட்டாரையும் வர சொல்லிவிடுறான். பின்பு ஹனிமூன் ட்ரிபை பாதியிலேயே கேன்சல் செய்து இருவரும் கிளம்பியிருக்கின்றனர். அப்போது அவனின் மனைவி பெங்களூரிலுள்ள தான் வேலை செய்யும் தலைமை அலுவலகத்திற்கு செல்ல போகிறேன் என்று பிடிவாதமாக சண்டை போட்டிருக்கிறது. தனது மனைவி எங்கேயாவது சென்று எதாவது செய்துகொள்ளுமோ என்ற பயத்துடன் பதற்றத்துடனும் இருந்த லஷ்மி நாராயணன் அவளை சமாதானப்படுத்தி அழைத்து சென்று குடும்பத்தாரிடம் அவளை ஒப்படைத்தான். ஹனி மூனில் மனைவி செய்த அட்ராசிட்டியை வைத்து விவாகரத்து செய்ய லஷ்மி நாராயணன் முடிவெடுத்தான்.
அப்போது என்னை வந்து சந்தித்த லஷ்மி நாராயணன் குடும்பத்தார் நடந்ததை விரிவாக கூறினர். பின்பு நான் அந்த பெண் வீட்டாருக்கு விவாக்ரத்து கேட்டு நோட்டீச் அனுப்பினேன். இது அந்த பெண்ணின் மாமாவுக்கு தெரிய அவரும் வழக்கறிஞராக இருந்ததால் என்னிடம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவருடைய விருப்பத்தை கூறினார். இதை நான் லஷ்மி நாராயணனிடன் சொன்னபோது அவனுக்கு ஹனிமூனில் பட்ட கஷ்டத்தை மறக்காமல் இல்ல மேடம் கண்டிப்பாக விவாகரத்து வேண்டுமென்று தெளிவாக கூறிவிட்டான். பெண் வீட்டாரும் விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டதால் லஷ்மி நாராயணனனுக்கு விடுதலை வாங்கி கொடுத்து திருமணத்திற்கு செலவு செய்த ரூ.25 லட்சத்தையும் பெண் வீட்டாரிடமிருந்து மீட்டுக்கொடுத்தோம்.