குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
கிரிதர் என்பவருடைய வழக்கு இது. இவருக்கு மிடில் கிளாஸ் வாமனா என்ற பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தார்கள். கிரிதர், லாரி ஏஜேன்ஸில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சுமூகமாகவும், சந்தோஷமாகவும் சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில், இவர்கள் இருந்த இடத்தில் இருந்து வேறு இடமான அண்ணா நகருக்கு மாற நினைக்கிறார்கள். அந்த சமயத்தில், கிரிதர் ஒரு விபத்தில் சிக்கி கால் எழும்பு முறிவு ஏற்பட்டதால், கிரிதரால் கடினமான வேலை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிரிதரின் தங்கச்சி வீட்டுக்காரர், தன்னுடைய ஆபிஸில் கிரிதருக்கு வேலை போட்டு 10,000 ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் கிரிதரின் குடும்பம் அண்ணா நகருக்கு மாறுகிறார்கள்.
கிரிதரால், குழந்தைகளை பள்ளியில் விட்டு வர முடியாததால் அவரது மனைவிக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து குழந்தைகளை பள்ளியில் விட சொல்கிறார்கள். அதன்படி, தான் நாட்களும் செல்கிறது. கிரிதரின் அம்மாவுக்கும், வாமனாவை நிறையவே பிடிக்கிறது. அண்ணா நகருக்கு வந்து 1,2 வருடங்களுக்கு பிறகு, அந்த பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு வாமனா தன்னை அழுகுப்படுத்திக்கொள்ள அதிக நேரத்தை செலவிடுவதால் கிரிதரின் அம்மாவுக்கு அவள் மீது சந்தேகம் வருகிறது. ஒரு மாலை நேரத்தில் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்ற மருமகள் 6 மணியாகியும் வராததால், கிரிதரின் அம்மா பதற்றமாகிறார். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வந்த மருமகளிடம், இது பற்றி விசாரிக்கையில் ஏதோ ஒன்றை சொல்லி சமாளிக்கிறாள். மதிய நேரத்தில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க சென்ற மருமகள் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், இதை பற்றி மாமியாரிடம் கூறுகிறார். இது போன்று செய்திகள் அடிக்கடி மாமியாரின் காதில் விழ, இது பற்றி கிரிதரிடம் தெரிவிக்க, அவனும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இருப்பினும், இது பற்றி தன் குழந்தைகளிடம் கேட்க, அவர்கள் அம்மா தான் பார்க்குக்கு அழைத்து போனார் என்றும் அங்கு எங்களை விளையாட வைத்து விட்டு தனியாக எங்கோ சென்று லேட்டாக எங்களுடன் வருவார் என்றும் சொல்லிவிட்டனர். ஒரு நாள், ஒரு அங்கிளோடு அம்மா காரில் பேசிக்கொண்டிருந்தார் என்பதையும் குழந்தைகள் சொல்லிவிட்டனர். எதோ ஒன்று நடக்கிறது என்பதை உணர்ந்த கிரிதர், இதை பற்றி தன் மாமனாரிடம் தெரிவிக்க அவரும் பார்த்துக்கொள்வதாக தெரிவிக்கிறார். ஒரு நாள் பெண்ணின் அப்பா தன் மகளை லீவுக்காக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இந்த விஷயத்தை தன் மனைவியிடம் சொல்கிறார். அங்கு சென்ற பெண், தன் அம்மாவிடம் போன் வாங்கி யாருடனோ பேசுவதை அம்மா பார்த்து கேட்க அவளும் சமாளிக்கிறாள். இப்படியே நாட்கள் செல்ல, ஒரு நாள் அந்த பெண்ணின் கையில் ஒரு போன் இருப்பதை கவனிக்கிறார். மேலும், கோவிலுக்கு செல்கிறேன் என்று சொல்லி காலை வெளியே சென்ற பெண் மாலை 3 மணிக்கு வருவதை பார்த்து அம்மா கேட்க மீண்டும் சமாளிக்கிறாள்.
அந்த பெண், இங்கிருந்து கிளம்பி வேறு ஒரு ஊரில் உள்ள சப் கோர்ட்டிற்கு சென்று கிரிதரின் பெயரில் விவகாரத்து வழக்கு தாக்கல் செய்திருக்கிறாள். இந்த விஷயம், யாருக்கும் தெரியாது. சில நாட்கள் கழித்து, தன் மகளை மருமகன் வீட்டில் விட்டு அட்வைஸ் செய்து வந்திருக்கிறார் மாமனார். ஒரு நாள், மனைவி யாருடனோ பேசுவதை தான் பார்த்ததாக மாமனாரிடம் கிரிதர் தெரிவிக்க, அவரும் சரிசெய்துவிடலாம் என்று சொல்லி தன் மகளை வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்ற பெண், நாள் முழுவதும் வீட்டில் இல்லாததால் அம்மாவும் அப்பாவும் தேடுகிறாள். மாலை 9 மணியளவில் தன் அப்பாவுக்கு, எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை, என்னை தேட வேண்டாம் என மெசேஜ் மட்டும் அனுப்புகிறாள். இது குறித்து அறிந்த கிரிதர், தன் தங்கச்சி வீட்டுக்காரரை அழைத்து மாமனார் வீட்டுக்கு வருகிறார். இதற்கிடையில் பெண்ணின் அப்பா, போலீஸ் ஸ்டேசனில் மிஸ்ஸிங் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். அதன்படி, அந்த பெண்ணின் அம்மாவின் போனை எடுத்து செக் செய்கையில், திரும்ப திரும்ப ஒரு நம்பருக்கு அந்த பெண் போன் செய்திருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த நம்பருக்கு சொந்தமான ராஜ்குமாருக்கு போன் போட்டு கேட்கும் போது எனக்கு ஒன்றும் தெரியாது என்று போனை வைத்துவிடுகிறார். சில மணி நேரம் கழித்து ஒரு வக்கீல், போலீஸ் ஸ்டேசனுக்கு போன் போட்டு என்னுடைய கிளைண்ட் ராஜ்குமாரை விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்.
இதற்கிடையில் வாமனா, உமன் கமிஷனில் தன்னுடைய குடும்பம் தன்னை சித்ரவதை செய்வதாக ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். மேலும், கிரிதரின் தங்கச்சி வீட்டுக்காரரும், அவரது மகனும் தன்னிடம் தவறாக பேசி நடந்துகொள்கிறார்கள் என்றும் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். அதன்படி, அங்கிருந்து எங்களுக்கு நோட்டீஸ் வந்ததால், அங்கு 3, 4 வாய்தாவுக்கு கிரிதர் சென்றாலும் அந்த பெண் அங்கு வருவதேயில்லை. 10, 15 நாட்கள் கழித்து வாமனா அனுப்பிய டைவர்ஸ் நோட்டீஸ் கிரிதருக்கு கிடைக்கிறது. இதில் அதிர்ச்சியடைந்த கிரிதர், என்னை பார்த்து முழுகதையையும் சொன்னார். நாங்கள், சேர்ந்த வாழ வேண்டும் என்ற மனு போட்டு ஹை கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதற்கிடையில், தன் மாமியார் அடித்து துரத்தி சித்ரவதை செய்ததாக டொமஸ்டிங் வைலன்ஸில் வாமனா கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். அதனால், மாமியாருக்கு பெயில் வாங்கி, சில நாட்கள் கழித்து அந்த கம்ப்ளைண்டே பொய் என உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு அந்த வழக்கை பொய் என நிரூபித்தோம். அதன் பிறகு தான் கொஞ்ச கொஞ்சமாக உண்மை வெளிவந்தது.டைரி எழுதும் பழக்கம் கொண்ட வாமனா வெளியே சென்ற பின்பு, அந்த டைரி கிரிதரின் கையில் கிடைக்கிறது. கோர்ட்டில் தன் கணவன் மீது சொன்ன குற்றச்சாட்டும், டைரியில் குறிப்பிட்ட நிகழ்வுகளும் வேறு வேறு மாதிரி இருந்ததால் அவள் கூறியதும் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கு 3, 4 வருடமாக நடந்தது. ராஜ்குமார் தான், வாமனாவுக்கு வக்கீலை அரேஞ் செய்து உதவியிருக்கிறான். அவனோடு தன் மனைவி இருக்கிறாள் என்பதை தெரிந்துகொண்டு டைவர்ஸ் கேஸ் போட்டான். அதன் பிறகு, இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. தீர்ப்பு ஆனதுக்கு பிறகு ஒரு இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண்ண கோர்ட்டில் பார்க்கும் போது புது தாலியோடு ராஜ்குமாரோடு வருகிறாள். ராஜ்குமாருக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளை பள்ளியில் விடும்போது வாமனாவோடு பழக்கம் ஏற்பட்டதால் இந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.