Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி1

Published on 13/04/2019 | Edited on 15/07/2019

அதானிக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட விமான நிலையங்கள்!  ADANI AIRPORT SCAM (KERALA)


அந்தப்பக்கம் பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல் என்று வேடிக்கை காட்டி பெருமிதக் கூச்சல் போட்டுக்கொண்டே, இந்தப்பக்கம் ஆறு முக்கிய விமான நிலையங்களில் 5ஐ அதானி குழுமத்தின் கவுதம் அதானிக்கு தாரைவார்த்தார் மோடி. இதையும் கேரளா முதல்வர் பினராயி விஜயன்தான் முதலில் வெளிக்கொண்டுவந்தார். 
 

athani ambani


விமான நிலைய பராமரிப்புத் துறையில் அதானி குழுமத்திற்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. அப்படிப்பட்ட குழுமத்திற்கு ஐந்து விமான நிலையங்கள் கிடைத்தது மர்மமாக இருக்கிறது என்றார் பினராயி. திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையமும் இந்த ஐந்து விமான நிலையங்களில் ஒன்று. இந்த விமானநிலையத்தை பராமரிக்கு அதானி குழுமம் பயணி ஒருவருக்கு 168 ரூபாய் என்று ஏலம் கேட்டிருந்தது.

 

ஆனால், கேரளா மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் பயணி ஒருவருக்கு 135 ரூபாய் என்றும், ஜிஎம்ஆர் நிறுவனம் பயணி ஒருவருக்கு 63 ரூபாய் என்றும் ஏலம் கேட்டிருந்தது. குறைந்த தொகை ஏலம் கேட்டவருக்கு ஏலம் கொடுக்காமல் அதிகபட்ச தொகையை கேட்டவருக்கு ஏலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்திற்கு விமான நிலைய பராமரிப்பு பற்றி தெரியாவிட்டாலும் பிரதமர் மோடியை நன்றாக தெரிந்திருந்ததால்தான் இந்த ஏலம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பினராயி கிண்டல் செய்திருக்கிறார். அத்துடன், விமான நிலைய பராமரிப்புக்காகவே உருவாக்கப்பட்ட கேரளா மாநில தொழில் வளர்ச்சிக்கழகத்திற்கு உரிமத்தை வழங்க வேண்டும் என்றும் மோடிக்கு கடிதம் எழுதினார்.
 

 

மத்தியப்பிரதேசத்தில் விளம்பரமாகிய விளம்பர ஊழல்! (ADVERTISEMENT SCAM (MADHYA PRADESH)
 

fake news

 

விளம்பரத்திலும் வெளிநாட்டு பயணத்திலும் அரசாங்கத்தை நடத்திவிடலாம் என்று வெற்று ஆடம்பரம் செய்த மோடியின் பாஜக, மத்தியப்பிரதேசத்தில் விளம்பரம் செய்ததில்கூட 14 கோடி ரூபாய் ஊழல் செய்தது. அதாவது போலியான, அல்லது பதிவே செய்யப்படாத 234 இணையதளங்களின் பெயரால் மக்கள் பணம் 14 கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்கிய பாஜக அரசு, இந்துத்துவ கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் போலியான இணையதளங்களுக்காக மக்கள் பணத்தை கொட்டிக் கொடுத்திருக்கிறது.

 

 

அசாம் மாநில சிவில் சர்வீஸ் தேர்வு ஊழல்! (ASSAM CIVIL SERVICE EXAM SCAM)

 

bjp

 

அசாம் மாநில சர்வீஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்ற பாஜக எம்பி ஆர்.பி.சர்மாவின் மகள் பல்லவி சர்மா உள்பட 19 அரசு அதிகாரிகள் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பணம் கொடுத்து வேலை வாங்கியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளில் இடம்பெற்ற கையெழுத்து இவர்களுடைய கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை. தேர்வு முடிந்த பிறகு பல தேர்வர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டு புதிதாக விடை எழுதச் செய்ததாகவும் குற்றச்சாட்டு.

 

குஜராத்தில் அதானி நில அபகரிப்பு ஊழல்! ADANI LAND SCAM (GUJARAT)


 

adani

 

 

குஜராத் அரசாங்கத்துக்கு சொந்தமான 14 ஆயிரத்து 305 ஏக்கர் நிலம் அதானி குழுமத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. முந்த்ரா மற்றும் செஸ் வளர்ச்சித் திட்டத்துக்காக கட்ச் பகுதியில் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தின் விலை எவ்வளவு தெரியுமா? சதுர மீட்டருக்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய்தான். என்னே ஒரு தாராளம்!

 

செல்லாத நோட்டு மாற்றிய ஊழல்! (ADCB SCAM)

scam

 

மோடி பணமதிப்பிழப்பு செய்து அறிவித்த பிறகு சாதாரண மக்கள் ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன் மயங்கிக்கிடந்த சமத்தில், அமித் ஷா டைரக்டராக இருந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி மட்டும் ஐந்து நாட்களில் 745 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு புதிய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கிறது. ஐந்து நாட்கள் கழிந்ததும், கூட்டுறவு வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று நாடுமுழுவதும் அறிவிப்பு வந்தது. அதாவது, அதானி காரியம் முடிஞ்சது அல்லவா?
 

அடுத்த பகுதி:

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2

 

சார்ந்த செய்திகள்