Skip to main content

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்; டிங் லிரென் - குகேஷ் மோதல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
World Chess Championship Series Ding Liran - Gukesh

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பிடே (FIDE - International Chess Federation) தெரிவித்திருந்தது. மேலும் செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச ஏலத் தொகையாக சுமார் ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிடே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நடப்பு உலக சாம்பியனான டிங் லிரென் - குகேஷ் விளையாட உள்ளனர். பரபரப்பான இந்த போட்டி  2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையைக் கொண்டது. அதன்படி இந்த போட்டி நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிங் லிரென் வெற்றி பெற்று தனது பட்டத்தை தக்கவைப்பாரா அல்லது குகேஷ் உலக சாம்பியனாவாரா?. 

World Chess Championship Series Ding Liran - Gukesh

சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு, உலக சாம்பியன்ஷிப் போட்டி 2024ஐ நடத்துவதற்கான வாய்ப்பை வென்றுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு மூன்று போட்டி விண்ணப்பங்கள் வந்தன. இந்திய அரசு சார்பில் டெல்லியில் நடத்தவும், தமிழக அரசு சார்பில் சென்னையிலும், மற்றும் சிங்கப்பூர். இந்த ஏலங்களை மதிப்பாய்வு செய்து, போட்டி நடத்துவதற்கான சாத்தியமான அனைத்து நகரங்களையும் அவற்றின் இடங்கள், வசதிகள், நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை ஆய்வு செய்த பிறகு போட்டியின் தொகுப்பாளராக சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.