தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்தவர் கேரி கிறிஸ்டென். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2008 - 2011 காலகட்டத்தில் செயல்பட்டு, இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கும் காரணமாக இருந்தார்.
தற்போது கேரி கிறிஸ்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் விராட் கோலியின் திறமை மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வம் குறித்து மெய்சிலிர்த்து பேசியுள்ளார்.
விராட் கோலி எப்போதும் தன்னை முன்னேற்றிக்கொண்டு, கிரிக்கெட்டில் புதிய சாதனைகளைப் படைப்பதில் தீராப்பசி. எப்போதும் பயிற்சி, டிப்ஸ் என விளையாட்டில் கண்ணுங்கருத்துமாய் இருக்கும் அவருக்கு பயிற்சியளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மிகச்சிறந்த வீரர். ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்பட்டு தன்னை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதில் அவர் கில்லாடி.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடினமானதாக இருக்கும். அதை உணர்ந்துகொண்டே, அங்கு நடக்க இருக்கும் கவுண்டி போட்டியில் கலந்துகொள்கிறார். இங்கிலாந்தின் கடினமான சூழல்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அங்கு களமிறங்குவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலனைக் கொடுக்கும் என கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.