Skip to main content

இனி யார் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற விவாதத்திற்கு இடமில்லை...

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

சில மாதங்களுக்கு முன்புவரை விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்மித், இங்கிலாந்தின் ரூட், நியூசிலாந்தின் வில்லியம்சன், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா ஆகியோரில் யார் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் அவ்வப்போது வரும். ஆனால் இப்போது அதைப்பற்றி பேச்சே வருவதில்லை. இதற்கு காரணம் மற்றவர்களைவிட வேறு லெவலுக்கு யாரும் நெருங்க முடியாத அளவிற்கு வெகுதூரம் சென்றுவிட்டார் கோலி. 

 

virat

 

கிரிக்கெட்டில் சாதனைகள் என்பது அரிதாகவே படைக்கப்பட்டு வந்தது. சச்சின், கோலி போன்றோர் இதற்கு விதிவிலக்கு. இன்று கோலி எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் ஏதாவது ஒரு விதத்தில் சாதனையாக மாறிவருகிறது. கோலி மட்டும் எப்படி பவுலர்களை சாதாரணமாக விளாசுகிறார், என்ற கேள்வி எழுமளவிற்கு அவரின் பேட்டிங் உள்ளது. டைமிங், பர்ஃபெக்‌ஷன், ப்ளேஸ்மென்ட் என அனைத்திலும் இன்று கோலிக்கு நிகர் அவரே. 
 

ஒருநாள் போட்டிகளில் கோலி படைக்காத சாதனைகளே இல்லை என்றளவிற்கு புள்ளிவிவரங்கள் விரைவில் மாறும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எடுத்த ரன்கள் 250. இதில் கோலியின் பார்ட்னர்ஷிப் ரன்கள் 248. இந்தப் போட்டியில் இந்திய அணி எடுத்த ரன்களில் 46% ரன்கள் கோலி எடுத்தவை. அதிக ரன்களில் மட்டுமல்ல. ஃபினிஷிங், அதிரடி, வின்னிங் லீடர் என கோலி இந்திய அணிக்கு பல வகைகளில் பங்களித்து வருகிறார்.
 

உள்நாடு, வெளிநாடு, பர்ஸ்ட் பேட்டிங், சேசிங், ஸ்பின், பாஸ்ட், பேட்டிங் பிட்ச், பவுலிங் பிட்ச் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் தான் நம்பர் 1 என்பதை நிருபித்து வருகிறார். கடைசியாக விளையாடிய 14 தொடர்களில் 13 தொடர்களில் பேட்டிங் சராசரி 50+. இப்படி ஒரு கன்சிஸ்டன்ட்டாக விளையாட விராட் கோலியால் மட்டுமே முடியும். 92, 77, 134, 58. இந்த எண்கள் ரன்கள் இல்லை. கடைசி 4 வருடங்களில் கோலியின் பேட்டிங் சராசரி. வேறெந்த பேட்ஸ்மேனும் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இப்படியொரு சராசரியை வைத்திருக்க இயலாது. 

 

virat

 

கடைசி 3 வருடங்களில் அதிக ரன்கள் (3481), அதிக நிமிடங்கள் (3363) களத்தில் பேட்டிங் செய்தது, அதிக பந்துகள் (3525) சந்தித்தது, அதிக பவுண்டரிகள் (327), அதிக சதங்கள் (15), டாப் 5 பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் (98.75), அதிக பேட்டிங் சராசரி (89.25), டாப் 5 பேட்ஸ்மேன்களில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் (43) என கோலியின் சாதனை புள்ளிவிவரங்கள் பட்டியல் எல்லையின்றி சென்றுகொண்டே இருக்கும்.  
 

சேசிங் கிங், பெஸ்ட் பேட்ஸ்மேன் என அதிகம் அறியப்பட்ட கோலி அதிரடி, ஃபினிஷிங், கேப்டன் பொறுப்புகளிலும் அசத்தியுள்ளார். ஃபினிஷர் என்றால் கடைசி சில ஓவர்களில் இறங்கி அடித்து ஆடி வெற்றிபெற வைப்பது என்பதுதான் இதுவரை நாம் பார்த்தது. ஃபினிஷர் என்பதற்கான வரையறையை மாற்றியவர் கோலிதான். தொடக்கம் முதலே தேவையான ரன்ரேட்டை மெய்ன்டைன் செய்து பல ஓவர்கள் இருக்கும்போதே அணியை வெற்றி பெற செய்வார் கோலி. முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் கோலி கடைசி 3 வருடங்களில் 54 போட்டிகளில் 14 முறை நாட் அவுட் என்பது குறிபிடத்தக்கது. 

 

ஒரு பேட்ஸ்மேனாக கொண்டாடப்பட்ட கோலி, ஒரு சிறந்த கேப்டனாக பெரியளவில் கொண்டாடப்படவில்லை. வெளிநாடுகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோலி தலைமையில் இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கோலியின் தலைமையில் இந்திய அணி வென்ற அளவிற்கு வேறெந்த இந்திய கேப்டனின் தலைமையிலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை.
 

virat

 

பேட்ஸ்மேன் கோலிக்கு கிடைத்த கிரடிட், கேப்டன் கோலிக்கு கிடைக்கவில்லை. கேப்டனாக கோலி சிறு தவறு செய்யும்போதெல்லாம் அது ஊதி பெரிதாக்கப்படும். ஆனால் அணி வெற்றி பெற்ற போதெல்லாம் அதற்கான கிரடிட் அவருக்கு அளிக்கப்படவில்லை. 
 

கேப்டனாக கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்பது உண்மை. இருப்பினும் வெற்றி பெறும்போதெல்லாம் பெரிய அளவில் அவருக்கு கிடைக்காத கிரடிட், தோல்வி பெறும்போது விமர்சனம் அவர்மீது பாய்கிறது. டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் பெரிய சீனியர் வீரர்கள் இல்லாமல் கோலி தலைமையில் வெற்றிகளை பெற்றுவருவதையும் கவனிப்பது அவசியம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்