Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வரலாறு படைத்தார் மீராபாய் சானு... பதக்க கணக்கை தொடங்கியது இந்தியா!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

mirabai chanu

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், நேற்று (23.07.2021) கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கியது. இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரஷ்யா வெள்ளி பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வெண்கலத்தையும் வென்றுள்ளது.

 

வில்வித்தை கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், அவர்கள் காலிறுதியில் தென் கொரியாவின் ஆன் சான் - கிம் ஜே தியோக் ஜோடியை எதிர்கொண்டனர். இதில், தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடியை, ஆன் சான் - கிம் ஜே தியோக் ஜோடி 2 - 6 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

 

இதற்கிடையே, பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.