இந்தியா ஆஸ்திரேலியா இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
ஐந்து ஒருநாள் மற்றும் மூன்றூ டி20 கிரிக்கெட் போட்டிகளை இந்திய அணியுடன் விளையாடுவதற்காக, இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே ஆடிய இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஹாட்-ட்ரிக் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்போடு இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகலிரவாக நடக்கவிருக்கும் இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.