இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் அளித்த பேட்டி ஒன்றில் தோனியின் கேப்டன்ஸி குறித்தும் இந்திய அணியின் தற்போதைய சிக்கல்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
அவர் அளித்த அந்த பேட்டியில், "கே.எல்.ராகுல் 5-வது இடத்தில் நான்கு முறை சரியாக பேட்டிங் செய்யத் தவறினால், தற்போதைய இந்திய அணி நிர்வாகம் அவரது இடத்தை மாற்றிவிடும். இருப்பினும், தோனியின் காலத்தில் இப்படி இல்லை. வீரர்கள் சரியாக விளையாடாத அத்தகைய நிலைகளில் வீரர்களை ஆதரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை தோனி அறிவார். பேட்டிங் பிரிவில் ஒவ்வொரு வீரரை பற்றியும் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் வீரர்களை சரியாக அடையாளம் கண்டார்.
நீங்கள் வீரர்களுக்கு நேரம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் வேறு எப்படி கற்றுக் கொண்டு பெரிய வீரர்களாக மாறுவார்கள். நானே துவக்கத்தில் மிடில் ஆர்டரில் பேட் செய்து நிறைய தவறுகளைச் செய்தேன். இது அணியின் தோல்விகளுக்குக் கூட காரணமாக அமைந்தது. வீரர்களுக்கு நேரம் தேவை. தற்போதைய நிலையில், ராகுல் கீப்பராக தொடர இந்திய அணி நிர்வாகம் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.