Skip to main content

வீரருக்கு கரோனா: மும்பை - பெங்களூர் ஐபிஎல் போட்டி நடப்பதில் சிக்கல்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

daniel sams

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளும் நெருங்கி வருகின்றன. ஐ.பி.எல் போட்டிகள் வரும் 9ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல் ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இவர்களைத் தவிர்த்து மும்பை மைதான ஆடுகளப் பராமரிப்பாளர்கள் 8 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரும், விக்கெட் கீப்பிங் ஆலோசகருமான கிரண் மோருக்கு நேற்று (06.04.2021) கரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்தநிலையில் பெங்களூர் அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவுமில்லை என பெங்களூர் அணி தெரிவித்துள்ளது.

 

நாளை மறுநாள் (9.04.2021) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவிருக்கும் நிலையில், மும்பை மற்றும் பெங்களூர் அணி குழுக்களில் கரோனா உறுதியாகிருப்பதால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.