இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனான ராஜேந்திர சிங்க் தாமி கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, 'ஊரக வேலைவாய்ப்பு' திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலையில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். அவர் வேலையில் ஈடுபடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி அவர் கூறும்போது, "கரோனாவுக்கு முன்பு வரை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பயிற்சி அளித்து வந்தேன். அதில் சிறு வருமானம் கிடைத்தது. இப்போது ஊரடங்கால் பயிற்சி முடங்கியுள்ளது, எனவே என் சொந்த ஊருக்கு வந்தேன். என்னுடைய சகோதர் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். இப்போது அவருக்கும் வேலை இல்லாததால் குடும்ப சூழலை சமாளிக்க முடியவில்லை. அதனால் இந்த வேலையை செய்து வருகிறேன்" என்றார். இந்த செய்தி இணையத்தில் பரவத்தொடங்கியதும் நடிகர் 'சோனு சூட்' அவருக்கு உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.