Skip to main content

டாஸ் கணிப்பும்... இங்கிலாந்து எடுத்த மாற்று முடிவும்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, சவுத்தாம்டனில் வைத்து இன்று தொடங்கவுள்ளது. இந்தத் தொடரின் அடுத்தகட்ட நிலையை நான்காவது போட்டிதான் தீர்மானிக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 
 

India

 

 

 

இன்றைய போட்டியில் டாஸ் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை, ஏற்கெனவே பேசியிருந்தோம். சில தினங்களுக்கு முன்னர் இதே மைதானத்தில் ஹேம்ப்ஷிர் மற்றும் நாட்டிங்காம்ஷிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த நிகழ்வுகள், சில விஷயங்களை உணர்த்தின. அதன்படி, டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யவேண்டும். நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் சுழற்பந்துக்கு ஏதுவானபடி பிட்சின் தன்மை மாறும். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி காத்திருக்கிறது உள்ளிட்ட சிலவற்றை கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
 

அதேபோல், முதல் இன்னிங்ஸில் அஸ்வின் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் சுழலுக்கு சாதகமான சூழலில், அஸ்வினுக்கு இந்த விக்கெட்டுகள் நம்பிக்கையை அளிக்கும் என்றும் இந்திய அணியின் வெற்றிக்கான தேவைகள் குறித்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். 
 

 

 

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரூட் செய்த தவறு என விமர்சிக்கப்பட்டது இதுபோன்ற மாற்று முடிவைத்தான். இருப்பினும், மைதானத்தின் சூழல் என்பது நிலையான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது. அந்த வகையில், போட்டியின் தன்மை போட்டி நடக்கும்போதுதான் தெரியும். இந்திய நேரப்படி போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.