தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டியிட்டனர்.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.