ஹர்திக் பாண்டியா நிகழ்த்திய புதிய சாதனை!
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இலங்கை பள்ளிக்கேலில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே அபாரமாக ஆடி வருகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் 26 ரன்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மலிந்தா புஷ்பகுமரா வீசிய ஓவரில் 4, 4, 6, 6, 6, 0 என பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசினார்.
ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஹர்திக் பாண்டியா 107 (87) ரன்களுடனும், உமேஷ் யாதவ் 2 (3) ரன்களுடனும் ஆடி வருகின்றன. இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 466 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக தவான் 119 (123) ரன்கள் எடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா தன் முதல் டெஸ்ட் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்துள்ளார்.