ஒரே ஓவரில் 6 சிக்ஸர் மற்றும், ஃபோர்கள் அடித்து உலகசாதனை படைத்துள்ளனர், நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியைச் சேர்ந்த ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன்.
நியூசிலாந்தில் உள்ளூர் ஒருநாள் போட்டிகள் நடந்துவருகின்றன. அதன் ஒரு போட்டியில் அந்நாட்டின் உள்ளூர் அணிகளான நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி நியூசிலாந்திலுள்ள ஹாமில்டன் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 313 ரன்கள் எடுத்தது. இந்த ரன்கள் வர முக்கிய காரணம் ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஜோடி. இவர்கள் இணைந்துதான் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்தனர்.
அந்த ஓவரில் அவர்கள் எடுத்த ரன்கள் இதுதான் 4, 6+nb, 6+nb, 6, 1, 6, 6, 6
இதற்குமுன் ஜிம்பாவே வீரர் எல்டன் சிகும்பரா ஒரு ஓவரில் 39 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்த ஜோடி தகர்த்துள்ளது. சர்வதேச போட்டிகளில் 36 ரன்கள் எடுத்ததுதான் சாதனையாக உள்ளது. இந்த 36 ரன்களை தென்னாப்ரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் சேர்த்தார். டி20 உலககோப்பையில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 36 ரன்கள் எடுத்ததே இன்றுவரை சாதனையாக உள்ளது.