Published on 26/06/2019 | Edited on 26/06/2019
இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய பஞ்சாப்பை சேர்ந்த மன்ப்ரீத் சிங் கோணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். கனடாவில் நடைபெற உள்ள டி-20 தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் பிசிசிஐ யிடம் அனுமதி வாங்க வேண்டும். எனவே அவர் தனது ஓய்வை அறிவித்துவிட்டு கனடாவில் நடக்க உள்ள உள்ள டி-20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த வாரத்தில் இதே தொடரில் பங்கேற்பதாக யுவராஜ் சிங் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.