உலகக்கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் நிலையில் போட்டிக்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ரபாடா விமர்சனம் குறித்து கோலியிடம் கேட்ட போது, "நான் ரபாடாவுடன் பலமுறை விளையாடி இருக்கிறேன். அவருடன் ஏதாவது பதிலளிக்க வேண்டியிருந்தால், நான் நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்கிறேன். பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி இங்கிடி, ஸ்டெயின், ரபாடா ஆகியோர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். டேல் ஸ்டெயின் மிகச்சிறந்த வீரர், அன்பாக பழகக்கூடியவர். என்னுடைய நீண்டகால நண்பர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியதும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் விரைவாக குணமடைந்து வர நான் வாழ்த்துகிறேன்" என கூறினார்.