Skip to main content

ஐபிஎல் போட்டிகள்: விற்று தீர்ந்த டிக்கெட்டுகள், பயிற்சியை தொடங்கிய வீரர்கள்...(படங்கள்)

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

 

 

12 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது.

ஏப்ரல் 5 ஆம் தேதி வரையிலான ஆட்டங்களுக்கு ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு பின்னதான போட்டிகளின் அட்டவணை நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

இந்த டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முதல் நாள் இரவு முதலே ரசிகர்கள் மைதானத்தின் முன்னர் குழுமியிருந்தனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனேயே இடித்து தள்ளிக்கொண்டு ரசிகர்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இந்த டிக்கெட்டுகள் 1300 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் இரவே ரசிகர்கள் ஏராளமானோர் டிக்கெட் வாங்க கூடியதால் அந்த இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் தற்போது சென்னை அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கெட் வாங்க காத்திருந்தபோது ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

போலீசார் தடியடி நடத்திய நிலையிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் வெல்லப்போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் இப்போதே விவாதிக்க தொடங்கியுள்ளனர்.