வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வங்கதேச அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

நாக்பூரில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு களமிறங்கிய வங்கதேச அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களையும், லோகேஷ் ராகுல் 52 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக முகமது நைம் 81 ரன்களையும் 77 ரன்களையும், முகமது மிதுன் 257 ரன்களையும் எடுத்தனர்.